
SMS Help line to Address Violence Against Dalits and Adivasis in India
Type ATM < your message > Send to 9773904050
]
எனது சொந்த ஊர் திண்டிவனம் அருகே உள்ள மானூர் நான் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவள் நானும் எனது கணவருமான ராமசந்திரனும் (கவுண்டர்) செஞ்சி ரங்கபூபதி நர்சிங் கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போதே அறிமுகமாக பழகினோம் பிறகு காதலித்தோம் எங்களின் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது கணவர் ராமச்சந்திரன் ஊரான முப்புளியில் எங்கள் வீட்டில் வசித்து வருகிறோம்.
எனது கணவர் வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார், நான் முப்புளியில் எனது கனவர் வீட்டில் உள்ளேன். எங்கள் ஊரில் கழிப்பரை வசதி கிடையாது. எங்கள் வீட்டிற்கு பின் பக்கம் உள்ள காலி இடங்கலில் நிறைய மரங்களும், செடிகளுமாக மறைவாக இருக்கும் இடத்தில் கிராமத்திலுள்ள பல பெண்கள் திறந்த வெளிக் கழிவறையாக பயன்படுத்துவார்கள். இதனால், நானும் அவ்வப்போது அந்த காலியிடத்தில் சிறுநீர் கழிப்பேன்.
இந்நிலையில்தான் கடந்த 20.12.2023 அன்று காலை நான் வீட்டிற்கு பின்பக்கம் சென்று சிறுநீர் கழித்துவிட்டு, வீட்டிற்குள் இருந்தேன் அப்போது கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரும், அவரது மனைவி சுகன்யா என்பவரும் என்வீட்டிற்கு வெளியில் நின்றபடி "ஏய். வெளிய வாடி வீட்டுக்குள்ள பூந்துகிட்டு என்னாடி செய்ற என்றார் என கூறி சத்தம் போடனர். நான் வீட்டிலிருந்து வெளியில் வந்து,"என்னாச்சு. ஏன் இப்படி பேசுறீங்க” என்றேன். அப்போது, மேற்படி சுகன்யா, "ஏண்டி பரத்தேவிடியா
நாயே என்னோட வீட்டுக்கு பின்னாடி இருக்குற இடத்துல நீ ஏண்டி பாத்ரூம் போற நாயே" என்று கேட்டார். அதற்க்கு எல்லோரும் போறாங்க நானும் போறேன். அதுக்கு ஏங்க இப்பிடி பேசரிங்க' ன்னு சொன்னேன். உடனே சுகன்யா ஒரு தடவ சொன்னா உனக்குப் புரியாதா நாங்க ஊர்ப்பொம்பளங்க போற இடத்துல, பறச்சி உனக்கு என்ன வேல, கவுண்டன் சாதியில கட்டிக்கிட்டதால நீ ஊர்க்காரி ஆயிடுவியா" என்று திட்டிக்கொண்டே வந்து என் முடியைப் பிடித்து இழுத்தார். அப்போது அவரது கணவர் சந்தோஷ்குமார் என்னருகில் வந்து எனது நைட்டியைப் பிடித்து இழுத்து என்னைக் கீழே தள்ளினர். கீழே விழுந்த என்னை கணவன் மனைவி இருவரும் காலால் மிதித்தும் உதைத்தும் சித்திரவதை செய்து மேலும் சாதி சொல்லி இழிவு செய்து பேசினர், இந்தக் கொடுமையும் அவமானமும் தாங்காமல் பயத்தில் நான் வீட்டுக்குள்ளேயே இருந்தேன் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. அதன்பிறகு 2912.2023 அன்று மாலை சுமார் 4:30 மணியளவில் நான் வீட்டில் இருந்தபோது மேற்படி சந்தோஷ்குமார் மேலும் சில ஆண்களுடன் எனது வீட்டிற்கு வந்தார். ஏண்டி பறத் தேவிடியா சொன்னா கேட்க மாட்டியா அங்க எதுகுடி நீ பாத்ரூம் போற" என்று மிரட்டினார். ஊரில் வேறு மறைவான இடமோ பொதுக் கழிப்பறையோ இல்லாத காரணத்தால் பெண்கள் பலர் இதனை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். என்னைத் தாக்கிய சந்தோஷ்குமாரிடம் அது கூடுவாஞ்சிகாரருடைய இடம்தானே என்னை ஏன் போகக்கூடாது என்கிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர், "சொன்னா கேக்காம எதுத்தா பேசற பற நாயே என்று திட்டி அடிக்க வந்தார்.
மேலும், எங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களிடம் இங்கிருந்து காலி செய்துக் கொண்டு போய்விடுங்கள், இவள அடிச்சி தெரத்த போரோம், இங்கிருந்து இவ போகலன்ன பெட்ரோல் குண்டு போட்டு காலி பண்ணிடுவோம். நீங்க தேவையில்லாம மாட்டிக்கிட்டு சாகாதீங்க என்று மிரட்டினார்கள்.
இது குறித்து வழக்கிறிஞர் முனியாண்டி அவர்களின் உதவியுடன் சம்பவதன்று மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆய்வாளர் லட்சுமி அவர்கள் நீ தான் ஊர்காரப் பையனை கல்யாணம் பண்ணிகிட்டு வந்துட்டியே அப்புறம் எப்படி SC-ல வருவ, SC/ST Act எல்லாம் வழக்கு போட முடியாது உனக்கு இது பொருந்தாது என கூறி மறுத்து விட்டார். அதன்பிறகு எஸ்.பி. டீ.எஸ்.பி ஆகியோருக்கு புகார் அனுப்பி SC/ST Act - ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
on dated 23.11.23 at approx: 6.30pm accused vinod and pardeep reached at victim house and attacked on Monu, when his mother Shimla devi triying to save him accused through a chair to vivtim. accused also broken their shop glass and Hukka.