
SMS Help line to Address Violence Against Dalits and Adivasis in India
Type ATM < your message > Send to 9773904050
]
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் வன்னியர் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் ஒன்பதாம் நாள் திருவிழாவான 2023 ஏப்ரல் 7 ந் தேதி அன்று, தலித் இளைஞர் கதிரவன் (24) த/பெ கந்தன் கோவிலுக்குள் சென்று வழிபட முயன்றுள்ளார். வன்னியர் சமூகத்தினர் தடுத்தி நிறுத்தியுள்ளனர். அப்போது பெறும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் அவ்விடத்திற்கு வந்துள்ளார். அவர் கதிரவணை பார்த்து, ‘’நீங்களாம் கோவிலுக்குள் வரக்கூடாதுன்னு இருக்கே.. இப்ப ஏன் பிரச்சனை பன்ற.. வீட்டிற்கு போ.. பிறகு பேசிக்கொள்ளலாம்” என கூறிவிட்டு சென்றுள்ளார். தகவல் அறிந்த வன்னியர் சமூகத்தினர் பெரும் கூட்டமாக கோவிலில் கூடியுள்ளனர். அப்போது, கதிரவன் தனது தந்தை கந்தனுக்கு கைபேசி மூலம் பேசி தகவலை கூறியுள்ளார். அங்கு வந்த கதிரவனையும், அவரது பெற்றோரையும் வன்னியர் சமூகத்தினர் தாக்கியுள்ளனர். அவரது உறவினர் சேகர் என்பவர், கதிரவனைக் காப்பாற்றி இழுத்துக்கொண்டு தலித் பகுதிக்குள் ஓடியுள்ளனர். அதுவரை வன்னியர் சமூகத்தினர் விரட்டி சென்றுள்ளனர். கதிரவன் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யக்கோரி தலித் மக்கள் அன்றிரவே சென்னை - கும்பக்கோணம் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று பேசுவார்த்தை நடத்தி புகாரை பெற்றுள்ளார். அதன்பிறகு மக்கள் வீடு திரும்பியுள்ளனர். இச்சம்பவம் ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவவே மாவட்ட நிர்வாகம் இரு தரப்பினரையும் அழைத்து தொடந்து 7 முறைக்கு மேல் சமாதனக் கூட்டம் நடத்தியுள்ளது. அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தை அரசியல் கட்சியினர், பல்வேறு இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு தலித் மக்களை அழைத்துக்கொண்டு கோவில் நுழைவு போராட்டம் அறிவித்ததால் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்கு கோட்டாட்சியர் பூட்டு போட்டு சீல் வைத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும், வருவாய் துறையும் இரு தரப்பினரையும் அழைத்து தொடந்து 7 முறைக்கு மேல் சமாதன கூட்டம் நடத்தியது. அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தை அரசியல் கட்சியினர், பல்வேறு இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு தலித் மக்களை அழைத்துக்கொண்டு கோவில் நுழைவு போராட்டம் அறிவித்ததால் மேல்பாதி துரௌபதி அம்மன் கோவிலுக்கு வருவாய் துறையினர் பூட்டு போட்டு சீல் வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தலித் மக்கள் ஏப்ரல் 7 ந் தேதி இரவு சாலை மறியல் செய்ததால் வளவனூர் காவல் நிலையத்தில் கு.எண். 177/2023 பிரிவு 143, 341, 188 ன் கீழ் 32 ஆண்கள், 18 பெண்கள் உள்பட 60 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தலித் இளைஞர் கதிரவனை தாக்கியதால் கதிரவன் அக்கா கனிமொழி கொடுத்த புகாரின் மீது கு.எண். 178/2023 பிரிவு 147,148,294(b), 341, 323, 324, 354, 153A(2), 504, 506(1), 3(1)(r), 3(1)(s), 3(1)(w)(1), 3(1)(za)(c), 3(2)(va) SC/St (PREVENTION OF ATROCITIES) ACT 1989 ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வன்னியர் சமூகத்தினர் கதிரவன் மீது கொடுத்த புகாரில் கதிரவன் மீது ஒரு வழக்கும், சாலை மறியலில் ஈடுபட்டதால் தலித் மக்கள் மீது ஒரு வழக்கும், வன்னியர் சமூகத்தினர் கோவிலின் வாயிலில் போராட்டத்தின் போது தற்கொலைக்கு முயற்சித்ததால் தனி, தனி நபர்கள் மீது இரு வழக்கும் பதிவு செய்துள்ளனர். இதுவரை இரு தரப்பிலும் யாரையும் கைது செய்யவில்லை. மேல்பாதி கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட போலிசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர்.