A Narikuravar Sengottaiyan was murdered by Caste Hindus (Code: TN-TRI-2023-202, Date: 27-Dec-2023 )

Back to search

Case Title

Case primary details

Case posted by Social Awareness Society for Youths-SASY
Case code TN-TRI-2023-202
Case year 27-Dec-2023
Type of atrocity SC/ST (POA) Act
Whether the case is being followed in the court or not? Yes

Fact Finding

Fact finding date

Fact finding date Not recorded

Case Incident

Case Incident details

Case incident date 27-Dec-2023
Place Village: Not recorded
Taluka:Not recorded
District: Tiruppur(DP)
State: Tamil Nadu
Police station Udumalpet
Complaint date 27-Dec-2023
FIR date 27-Dec-2023

Case brief

Case summary

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆர்.பொன்னாபுரம், சத்தியராஜ் நகரைச் சேர்ந்த செங்கோட்டையன், குமார் ஆகிய இருவரும் பட்டியல் பழங்குடியின நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஊசிபாசி மணிகளை தயார் செய்து ஊர், ஊராக சென்று விற்பனை செய்வதும், பேன்ஸி பொருட்களை மோட்டார் சைக்கிளில் கொண்டுச் சென்று விற்பனை செய்து அதில் வரும் வருவாயில் அவர்கள் குடும்பத்தை நடத்து வந்துள்ளனர். சில சமயங்களில் கொக்கு, காடை, குருவி போன்ற பறவைகளை உண்டி வில் மூலமாக வேட்டையாடுவதும் உண்டு.


இந்நிலையில் செங்கோட்டையன், குமார் ஆகிய இருவரும் கடந்த 27.12.2023 அன்று மதியம் சுமார் 2.00 மணியளவில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள தாந்தோணி பகுதியில் தென்னைசாலை (தென்னைதோப்பு) ஒன்றில் குருவி அடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த செங்குருவியை அடிக்கும் போது உண்டி வில்லில் இருந்து சென்ற கல் தென்னை சாலையில் உள்ள தகர கொட்டாய் மேல் விழவே சத்தம் எழும்பியுள்ளது. இதனால் அங்கிருந்த கோழிகள் பயந்து ஓடிபுதருக்குள் மறைந்து கொண்டுள்ளது.


அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இவர்கள் இருவரையும் பார்த்து “யார் நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்: என கேட்டதற்கு அவர்கள் இருவரும் குருவி அடிப்பதற்காக வந்தோம் என கூறியபோது அதற்கு அவர் ”நீங்கள் இங்கேல்லாம் வரக்கூடாது வெளியே போங்கள்” என கூறியுள்ளார். அவர்களும் தென்னைசாலையில் இருந்து அருகே உள்ள ரோட்டிற்கு வந்துள்ளனர்.


மோட்டார் சைக்கிளில் வந்தவர் ரோட்டிற்கு வந்த இருவரையும் மீண்டும் தென்னைசாலைக்குள் அழைத்துச் சென்று சாலைக்காரர் வருகிறார் இங்கே இருங்கள் என கூறி அவர்களை பிடித்து வைத்திருக்கிறார். சற்று நேரத்தில் தென்னைசாலை உரிமையாளர் செல்வக்குமார் என்பவர் சம்பவயிடத்திற்கு வந்துள்ளார். வந்தவர் கோழிகளை தேடிப்பார்த்திருக்கிறார் கோழிகள் எதுவும் அங்கு இல்லாததால் இவர்கள் தான் கோழிகளை திருடியுள்ளதாக எண்ணி செல்வக்குமார் அவரது ஆட்களுக்கு போன் செய்து வரவைத்துள்ளார். இதற்கிடையில் செங்கோட்டையனும், குமாரும் கோழி திருடவில்லை குருவிதான் அடிக்க வந்தோம் என கூறியும் அதை கேட்காமல் இருவரையும் அடித்துள்ளார் செல்வக்குமார்.
சற்று நேரத்தில் செல்வக்குமார் ஆட்கள் சாலைக்குள் வந்ததும் செங்கோட்டையனை நான்கு பேர் கூடி அடித்து ஒரு தென்னை மரத்தில் கட்டிபோட்டு மரத்தடியால் கொடுரமாக தாக்கியுள்ளனர். இதில் செங்கோட்டையனுக்கு இரண்டு முழங்காலிலும் அடிப்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இடது கை மணிக்கட்டு உடைந்துள்ளது. இடது பக்கம் விலா எலும்பும் உடைந்துள்ளது. தலையின் பின்புறம் அடிப்பட்டு கழுத்து பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இடது கை ஆள்காட்டி விரலை கொரடாவால் நசுக்கியுள்ளனர்.
இதேபோல் தென்னை சாலையில் சற்று தூரத்திற்கு குமாரை கொண்டு சென்று வந்தவர்களில் மற்ற நான்கு பேர் கொண்ட கும்பல் லைலான் கயிற்றால் சராமரியாக உடல் முழுவதிலும் அடித்துள்ளனர். பிறகு தென்னைமரத்தில் கட்டிவைத்து தென்னை பாலையால் கொடுரமாக அடித்துள்ளனர்.


இதை தொடர்ந்து மாலை சுமார் 5.00 மணி ஆகியதும் புதருக்குள் மறைந்திருந்த கோழிகள் அனைத்தும் தென்னைசாலைக்குள் வந்துவிட்டது. இதை கண்ட செல்வக்குமார் கோழிகள் திருடு போகவில்லை என்பதால் கட்டிப்போட்டிருந்த செங்கோட்டனையும், குமாரையும் அவிழ்த்துவிட்டிருக்கிறார்.


இதற்குயிடையில் சுமார் 3.30 மணியளவில் செங்கோட்டையன் பையில் வைத்திருந்த டைரியை எடுத்து செங்கோட்டையன் மகன் மாணிக்கம் என்பவருக்கு செல்பேசியில் தொடர்புக்கொண்டு பேசிய செல்வக்குமார் செங்கோட்டையன் யார் என கேட்டிறுக்கிறார். அதற்கு மாணிக்கம் எனது அப்பாதான் என கூறியதும். அதற்கு செவக்குமார் இங்கு கோழி காணவில்லை அதனால் இருவரையும் போலிசில் பிடித்து கொடுத்துவிட்டோம் என கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
அதன் பின் செங்கோட்டையனும், குமாரும் விடுவிக்கப்பட்ட பிறகு இருவரும் வீட்டிற்கு செல்லும்போது இடையில் செங்கோட்டையனுக்கு மயக்கம் வரவே குமார் வழிப்போக்கரின் உதவியோடு 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு உள்சிகிச்சை நோயாளியாக சிகிச்சைபெற்ற செங்கோட்டையன் சில நிமிடத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் கு.எண்.728/2023 பிரிவு 294(b), 342, 324, 506(ii), 302, r/w 3(1) (r), 3(1) (s), 3(2) (V) SC/ST PREVENTION OF ATROCITIES AMENDMENT ACT 2015 ன் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

Total Visitors : 11095090
© All rights Reserved - Atrocity Tracking and Monitoring System (ATM)
Website is Managed & Supported by Swadhikar