Dalit Peoples were Denied temple entry at Deevattipatti of Salem District (Code: TN-SALEM-2024-199, Date: 01-May-2024 )

Back to search

Case Title

Case primary details

Case posted by Social Awareness Society for Youths-SASY
Case code TN-SALEM-2024-199
Case year 01-May-2024
Type of atrocity SC/ST (POA) Act
Whether the case is being followed in the court or not? Yes

Fact Finding

Fact finding date

Fact finding date Not recorded

Case Incident

Case Incident details

Case incident date 01-May-2024
Place Village: Not recorded
Taluka:Not recorded
District: Salem(DP)
State: Tamil Nadu
Police station Deevattipatti
Complaint date 06-May-2024
FIR date 06-May-2024

Case brief

Case summary

தமிழகத்தின் வட மேற்கு எல்லையில் சேலம் தருமபுரி சாலை ஓரத்தில் உள்ளது தீவட்டிபட்டி, பொதுவாக சேலம் மாவட்டம் வறட்சி மாவட்டங்களில் ஒன்று. சாதிய இறுக்கம் கொண்ட மாவட்டம். தீவட்டிப்பட்டி, நாச்சினாம்பட்டியில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் சுமார் 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  

தீவட்டிப்பட்டியில் வன்னியர், சோழிய வேளாளர், போயர், உடையார், கவுண்டர், நாடார், அருந்ததியர், இஸ்லாமியர் சமூகத்தினர் சுமார் 3000 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்குதான் இந்து அறநிலைத்துறை கட்டுப்பட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த மாரியம்மனுக்கு மேற்கூறிய சமூகத்தினர் மட்டுமே வரி வசூல் செய்து ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இவ்விழா மூன்று வாரமாக நடைபெறும் விழாவில் முதலில் ஆதிதிராவிடர் குடியிருப்பு அருகே அமைந்துள்ள அம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து பிறகு காப்புக்கட்டி, கம்பம் நட்டு நோம்பு சாத்துவது வழக்கம் இறுதியில் தேரோட்டம் நடைபெறும்.

கடந்த 2023 ல் நடைபெற்ற திருவிழாவில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மூன்று முறை மறுமலர்ச்சி  திரைப்படத்தில் வரும் ராசு படையாட்சி எனும் பாடல் போடபட்டுள்ளது. நிகழ்ச்சியை கண்டுகளித்துக் கொண்டிருந்த ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த விஜயின் தம்பி முறையான மணிகண்டன் என்பவர் விஜயகாந்து பாடலான பொட்டு வச்ச தங்ககுடம் பாடலை கேட்டதால் வன்னியர் இளைஞர்களுக்கும் மணிகண்டனுக்கும் கைகலப்பு ஏற்பட்டு பிறகு காவல் நிலையம் வரை சென்று சமரசம் செய்யப்பட்டது.

 தற்போதைய சம்பவம்

மே 1 ந் தேதி ஆதிதிராவிடர் மக்கள் சுமார் 4 பேர் காப்பு கட்டுவதற்காக பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது பூசாரி உங்களுக்கு காப்பு கட்ட கூடாது என ஊர்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  மேலும் உங்களை கோவிலுக்கும் வரக்கூடாது என நிர்வாகிகள் சொல்லியிருப்பதாக கூறியிருக்கிறார்.

ஆதிதிராவிடர் மக்கள் காப்பையாவது கட்டிவிடுங்க என மீண்டும் கேட்டபோது பூசாரி காப்பை கீழே தூக்கி போட்டுவிட்டு நீங்களே எடுத்து கட்டிக்கொள்ளுங்கள் என சொல்லியிருக்கிறார்.

அன்றைய தினமே மாலையில் அம்மனுக்கு அலகு குத்துவது வழக்கம் எப்போதும் போல் மாலை 6.00 மணிக்கு ஆரம்பித்து 9.00 மணிக்கெல்லம் வன்னியர்களும் பிற சமுகத்தினரும் அலகு குத்தி முடித்துவிடுவார்கள், ஆனால் அன்று இரவு சுமார் 11.30 வரை முடிக்கவைல்லை. மேள இசையோடு ஆடிக்கொண்டு பா.ம.க கட்சி தலைவர் அன்புமணி உருவபடத்திற்கு பாலபிஷேகம் செய்து கொண்டும் வேண்டுமென்றே தாமதமாக கோவிலுக்குச் சென்றுள்ளனர்.

 அதன் பின் ஆதிதிராவிடர் சமூகத்தினர் சுமார் நான்கு பேர் அலகு குத்திக்கொண்டு கோவிலுக்கு சென்றுள்ளனர். பிறகு அலகை எடுத்துவிட பூசாரியிடம் கேட்டபோது எடுத்துவிட மறுத்துள்ளார். அதன் பின் இரவு சுமார் 1.00 மணி அளவில் மேளகாரர்கள் உதவியோடு அவர்களே அலகை எடுத்து கொண்டுள்ளனர்.   

இதை தொடர்ந்து ஆதிதிராவிடர் மக்கள் தேங்காய் உடைக்க கேட்டுள்ளனர் அப்போது பூசாரி தேங்காயும் உடைக்க முடியாது, திருநீரும் கொடுக்கமுடியாது என கூறியிருக்கிறார். அங்கிருந்த ஆதிதிராவிடர் சமூகமான விஜய் என்பவரின் தம்பி மணிகண்டன் என்பவர் வாக்குவாதம் செய்து கோவிலுக்குள் நுழைய முற்பட்டுள்ளார். இதை கண்ட பூசாரி கோவில் கருவரை திரையை மூடிவிட்டு. பூசாரியும், ஊர்காரர்கள் சிலரும் உடனே காவல் துறைக்கும் வருவாய் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு வட்டாட்சியர் ஹசினாபேகம் மற்றும் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் கோவிலுக்கு வந்துள்ளனர்.

காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவரும் அ.தி.மு.க கட்சியின் ஒன்றிய மாணவர் அணி செயலாளருமான விஜயன் என்பவரை உடனே கோவிலுக்கு வரும்படி செல்போனில் பேசி அழைத்துள்ளார். அவர் கோவிலுக்கு வந்து ஆதிதிராவிடர் இளைஞர்களை சமாதனப்படுத்தி நாம் இதுவரை ஒற்றுமையாக இருந்து வருகிறோம் ஏன் இப்போது பிரச்சனை என பேசி தலித் இளைஞர்களை சமாதனபடுத்தி அழைத்து சென்றிருக்கிறார்.

மறுநாள் 2 ந் தேதி காடையாம்பட்டி வட்டாட்சியர் ஹசினாபேகம் தலைமையில் சமாதனம் கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் ஓமலூர் டி.எஸ்.பி சஞ்சீவிகுமார், தீவட்டிபட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன், இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் கதிர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இருதரப்பிலும் தலா 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் ஞானசேகரன் இந்த கோவில் 1973 ல் இருந்து இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோவிலுக்குள் வர அனைவருக்கும் உரிமை உண்டு என கூறியிருக்கிறார்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் போயர் மட்டும் கோவிலுக்குள் விடுவோம், இவர்களை விடமாட்டோம் மீறி இவர்கள் கோவிலுக்குள் வந்தால் வெளியே நின்று கும்பிடட்டும். அதற்கும் ஒரு நேரம் ஒதுக்கி சொல்கிறோம்.  நாங்கள் தற்போது 10 பேர்தான் கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறோம். மற்றவர்கள் எல்லாம் கோவிலில் இருக்கிறார்கள். அவர்களோடும் கலந்து பேசுகிறோம் எங்களுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் என கூறியிருக்கிறார்கள். பிறகு சுமார் 1.00 மணியளவில் கூட்டம் முடிக்கப்பட்டு அவர், அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பெரிய மாரியம்மன் கோவிலில் அடுத்தநாள் 3 ந் தேதி தேரோட்டம் என்பதால் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பற்றி பேசுவதற்கு ஆண்களும், பெண்களும் கூட்டமாக கூடி கோவிலில் இருந்துள்ளனர். அப்போது விஜய்யின் தம்பி மணிகண்டன், அருண்,இவர்களுடன் ஒருவர் சேர்ந்துக்கொண்டு மூவரும் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு உருட்டுக்கட்டையுடன் சென்றுள்ளனர். இதை கண்ட மாற்று சாதி இளைஞர்கள் மூவரையும் துரத்திக்கொண்டு ஓடும் போது அவர்கள் கையில் பிடிபடவில்லை என்பதால் கருங்கல்லை எடுத்து அடித்துளள்னர். இதில் அருண் என்ற தலித் இளைஞருக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது. பலத்த காயம் அடைந்த அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தகவல் அறிந்த அருணின் தாயார் பெருமாயி (44), பதறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடும் போது தலித் மக்களுக்கும் தகவல் பரவவே சுமார் 250 க்கும் மேற்பட்ட மக்கள் சேலம் டூ தருமபுரி நெடுஞ்சாலையில் கூடியுள்ளனர். பின்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அருணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.  தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலித் மக்களிடம் ஒன்பது பேரை அடையாளம் கண்டிருப்பதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் தலித் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

அதே தருணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கோவிலுக்குள் நுழைய முற்பட்ட போது தகவல் பரவவே தீவட்டிப்பட்டியை சேர்ந்த பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதியினர் ஒன்று கூடி அவர்களும் நெடுஞ்சாலைக்கு வந்து கற்கலால் தலித் மக்கள் மீது வீசியுள்ளனர். இதனால் தலித் மக்களும் அவர்கள் மீது கற்களை வீசிக்கொண்டே பீதியில் அவர்கள் பகுதிக்கு ஓடும்போது ஒரு சில தலித் இளைஞர்களால் தீவட்டிப்பட்டியில் உள்ள வன்னியர் சமூகத்தினரின் நான்கு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இருதரப்பும் கற்களை வீசியதில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் தாக்கப்பட்டுள்ளனதாக் தெரிகிறது. மேலும் காவல் வாகனமும், ஒரு ஆட்டோவும் சேதபடுத்தப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் தலித் இளைஞர்களே செய்ததாக காவல் துறையினரும், தலித் அல்லாதவர்களும் கூறுகின்றனர்.

இதன் பிறகே சுமார் 200 க்கும் மேற்பட்ட போலிசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து சம்பவத்தில் ஈடுபட்ட இரு தரப்பிலும் சிலரை உடனே கைது செய்துள்ளனர். ஆனால் தொடர்ந்து நாச்சினாம்பட்டி, தீவட்டிப்பட்டி தலித் கிராமத்தில் போலிசார் அத்துமீறி நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்து பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்து பிறகு சிறையில் அடைத்துள்ளனர்.

காவல் துறையின் தொடர் தாக்குதலில் தலித் சமூகத்தினரின் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என சுமார் 60 க்கும் மேற்பட்டோர் கொடுரமாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர். 

Total Visitors : 11095089
© All rights Reserved - Atrocity Tracking and Monitoring System (ATM)
Website is Managed & Supported by Swadhikar