Total records:1276

A village administrative officer sexually harassed a tribal woman who asked for her husband's death certificate

    நான் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் உள்ள நல்லாப்பாளையம் கிராமத்தில் இருளர் குடியிருப்பில் வசித்து வருகின்றேன். எங்கள் குடியிருப்பில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றோம்.   பழங்குடி  இருளர்  சாதியை  சார்ந்த எனக்கு  எழுத  படிக்க  தெரியாது. 


    கடந்த 2011-ஆம் ஆண்டு  எங்கள் ஊரைச் சேர்ந்த ஐய்யனார்  என்பவருக்கும்  எனக்கும்  இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. எங்கள் இருவருக்கும் பிறந்த 11 வயதுடைய மகன் கமலேஷ்  உள்ளான்.  கடந்த 2014 ஆம் ஆண்டு எனது  கணவர்  ஐய்யனார்  உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார்.


    கடந்த செப்டம்பர் மாதம் நல்லா பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் அவர்களை நானும் எனது மாமியார் குப்பு அவர்களும் நேரில் சந்தித்து எனது கணவர் அய்யனார் இறப்பு சான்றிதழ் வேண்டும் என்று கேட்டோம்.   அதற்கு  கிராம  நிர்வாக  அலுவலர்  உன் கணவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது இறப்பு சான்றிதழ் எடுப்பதற்கு கஷ்டம் உன்னுடைய செல்போன் நம்பரை என்னிடம் கொடுத்து விட்டுப் போ நான் அப்புறம் பேசுகிறேன்  என்று சொன்னார். என்  செல்  நம்பரை  கொடுத்து  விட்டு நானும்  என்  மாமியாரும்  வீட்டுக்கு வந்து விட்டோம்.


    சிறிது நேரத்தில் மேற்படி கிராம நிர்வாக அதிகாரி எனது கைபேசிக்கு தொடர்பு கொண்டு உன் கணவர் இறப்பு சான்று வாங்க வேண்டும் என்றால் ரூபாய் 5000 நீ  கொடுக்க  வேண்டும்  அப்போதுதான்  கிடைக்கும் என்று சொன்னார் என்னிடம் 5000 பணம்  இல்லை  அண்ணா  நான் ரொம்ப கஷ்டப்படுறேன் என் மாமியாரிடம் கேட்கிறேன் என்று சொன்னேன் அதற்கு மேற்படி கிராம நிர்வாக அதிகாரி உன் மாமியாருக்கோ, யாருக்கும்  தெரியக்கூடாது  தெரியாமல் நீ கொண்டு வந்து கொடு. நீ கொடுக்கும் 5000 பணம் எனக்கு மட்டும்  கிடையாது  மற்ற  அதிகாரிகளுக்கும்  நான்  கொடுக்க  வேண்டும்  யாருக்கும்  தெரியக்கூடாது  என்று  சொன்னார் அப்படி யாரிடமாவது நீ சொன்னால் உனக்கு கணவர் இறப்புச் சான்றிதழ்  கிடைக்காது என்று சொன்னார்.


    அதற்கு நான் என்னிடம் ஆயிரம் ரூபாய் இருக்கிறது அதை வேண்டுமானால் இப்பொழுது கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று சொன்னேன் அதற்கு மேற்படி கிராம நிர்வாக அதிகாரி நான் உன் வீட்டுக்கு வரவா என்று கேட்டார் வேண்டாம் நானே வருகிறேன் என்று சொன்னேன் முருகன் கோவில் அருகே நிற்கிறேன் வந்து கொடு என்று சொன்னார். நான் 1000 ரூபாய் கொண்டு போய் கொடுத்தேன் இரண்டு நாள் கழிந்து இறப்புச் சான்றிதழ் என்னிடம் உள்ளது மீதமுள்ள பணத்தை என்னிடம் கொடுத்து விட்டு வாங்கிச் செல் என்று சொன்னார் நான் 2000 எடுத்துச் சென்று இவ்வளவுதான் என்னிடம்  இருக்கிறது  இதற்கு  மேல்  என்னிடம்  பணம் இல்லை என்று சொன்னேன் அதை வாங்கி கொண்டு என் கணவர் இறப்புச் சான்றிதழ்  என்னிடம் கொடுத்தார் நான் வாங்கி வந்து விட்டேன்.


    மறுநாள் மேற்படி கிராம நிர்வாக அலுவலர் என் கைபேசிக்கு தொடர்பு கொண்டு விதவைகளுக்கு தமிழக அரசாங்கம் கொடுக்கும் பணத்தை நான் வாங்கி தருகிறேன் ஒதியத்தூரில் உள்ள  இ சேவை மையத்தில் உன் கணவர் இறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை. குடும்ப  அட்டை  ஆகியவற்றை பதிவு செய்தால் என்னிடம் வரும் நான் உனக்கு விதவை ஊக்கத்தொகை பணம் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார் அதன்படி நானும் பதிவு செய்தேன்.


    இரவு நேரத்தில் அடிக்கடி மேற்படி கிராம நிர்வாக அதிகாரி கைபேசிக்கு தொடர்பு கொண்டு  உன் கணவன் தான் இல்லையே என்னுடன் அஞ்சு நிமிடம் சுகத்துக்கு வா என்று சொன்னார்  அண்ணா நான் அப்படியெல்லாம் தப்பு செய்ய மாட்டேன் உங்களை என் அண்ணனாகத் தான் நினைக்கிறேன் அதுபோல் பேசாதீர்கள் என்று சொன்னேன் மீண்டும் மீண்டும் இரவு நேரங்களில் என் கைபேசிக்கு தொடர்பு கொண்டு பாலியல் சீண்டல் செய்து வந்தார். எனது  உடன்  பிறந்த  தம்பியிடம் மேற்படி சம்பவங்களை சொன்னேன். உடனே  எனது  தம்பி  அந்த  கிராம  நிர்வாக  அதிகாரி ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் அவர்களின் செல்போன் நம்பரை கொடு என்று கேட்டான் நான் கொடுத்தேன் எனது தம்பி சூர்யா செல்போனில் இருந்து (9361329708) கிராம  நிர்வாக  அதிகாரி செல்போன் (7639526138) தொடர்பு கொண்டு எதற்காக எனது அக்காவை தனியாவா! தனியாவா!! என்று  எதற்காக  அழைக்கிறீர்கள்  ஆசைக்கு  இணங்க  சொல்லி  வற்புறுத்தி  வருவது நல்லதல்ல என்று சொன்னான் அதற்கு மேற்படி கிராம நிர்வாக அதிகாரி என்னடா என்னை மிரட்டி பார்க்கிறாயா? நீ  ஓதியத்தூர்ல  இருக்கமாட்ட உன்ன  ஒழிச்சி  கட்டிடுவேன்  ஜாக்கிரதையா  இரு என்று மிரட்டினார்.


    அதன் பிறகு நான் இ-சேவை மையத்தில் விதவைத் தொகை  பெறுவதற்காக பதிவு செய்தேன். சிறிது நாட்கள் கழித்து சேவை மையத்திற்கு சென்று கேட்டேன். அவர்கள் கிராம நிர்வாக  அதிகாரி உங்களுடைய மனுவை ரத்து செய்துவிட்டார் நீங்கள் உடனே கிராம நிர்வாக அதிகாரி அவர்களை போய் பாருங்கள் என்று சொன்னார். 


    பிறகு நான் ஒதியத்தூரில் உள்ள எனது அம்மா வீட்டிற்க்கு சென்று அங்கியிருந்து 19.11.2023 தேதி மாலை 4  மணிக்கு  கிராம  நிர்வாக  அதிகாரி  அவர்களுக்கு  தொடர்பு  கொண்டு  அண்ணே  இ -  சேவை  மையத்தில்  நான்  பதிவு  செய்ததை  நீங்கள்  ரத்து  செய்து  விட்டீர்களா  என்று கேட்டேன் அதற்கு கிராம நிர்வாக அதிகாரி, ‘’நான் பேசியதை எல்லாம் நீ உன் தம்பியிடம் எதற்காக சொன்னாய்.. அதற்காகத்தான்  நான்  கேன்சல்  செய்தேன்..  உன் தம்பியை வைத்து விதவை பணம் பெற்றுக் கொள்” என்று சொன்னார்.   அண்ணே…  நான்  மிகவும்  ஏழை  தின  கூலிக்கு  கஷ்டப்பட்டு  வருகிறேன்  விதனை  பணம்  கிடைப்பதற்கு  வழிவகை செய்ய வேண்டும் என்று சொன்னேன். அதற்கு  மேற்படி கிராம நிர்வாக அதிகாரி உங்கள் சாதியைப் பற்றி எனக்கு தெரியும். எல்லோரும் நான் சொன்னதைத்தான் கேட்பார்கள்  நான்  கிராம  நிர்வாக  அதிகாரி  சங்கத்தில்  முக்கிய  பொறுப்பில் இருக்கிறேன். உன்  தம்பியால்  என்னை  ஒன்னும்  செய்ய  முடியாது.    நீ  என்னுடன் 5 நிமிடம் தனியா இருந்தால் என்ன என்று கேட்டார். எனக்கு அந்த பழக்கம் இல்லை.  அப்படி தப்பு செய்து வரும் பணம் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டேன்.


    அதன்பிறகுதான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். வழக்குப் பதிவு செய்த போலீசார். ரெண்டு, மூணு நாளா அவரைக் காணோம் அப்படின்னு சொன்னாங்க. அப்புறம் பத்திரிகையெல்லாம் செய்தி வந்தபிறகுதான் கைது செய்தார்கள். சஸ்பெண்ட் செய்துள்ளார்கள்.


     


     

  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: Not recorded
  • Date of Case Upload: 23-01-2024


Files

1) Fact Finding Report 
2) FIR Copy 

A Minority child was abused by Parents' Profession and corporal punishment by a Class Teacher in Thudiyalur

    A 12-year-old Muslim girl student who is studying in Class 7 of a government school in Ashokapuram in Thudiyalur, in Coimbatore, was allegedly subjected to religion-based discrimination by teachers of the school. According to the police complaint lodged by the parents of the student, a teacher named Abhinaya allegedly slapped a girl and asked her to clean her footwear in front of everyone in the classroom after the former found out that her father runs a beef shop and that she consumes it as well. “While beating her the teacher said my daughter’s rudeness was because she ate beef,” Mukthar alleged. He further claimed his daughter was made to clean the shoes of other students. He also accused the headmistress of refusing to act, when they brought the incident to her notice.



    Chief educational officer R Balamurali held an inquiry with the girl, her parents, the teacher and the headmistress. However, both the teacher and headmistress have denied the allegations and said the girl had only been pulled up for being poor in studies. They also accused the girl’s parents of raking up the issue with the backing of a few others.



    Education department officials are yet to complete the inquiry. Officials said they would speak to fellow students and teachers to ascertain whether the charges made by the girl’s parents are true. Balamurali refrained from making any comments as the inquiry is still on.



    The teachers have been suspended pending further investigation and the CEO has been tasked with overseeing the inquiry. “The student had raised the issue several times over the last two months, but when a complaint was lodged with the school authorities, they denied the matter and refused to conduct an inquiry. She was made to clean shoes using her niqab, beaten and verbally abused by teachers,” the girl’s parents claimed.  


    The FIR was not filed.

  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: 24-11-2023
  • Date of Case Upload: 21-01-2024


Files

1) Fact Finding Report 

A Dalit Man Ramesh was abused by caste name and brutally attacked by Caste Hindus

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 23, P.A.P குடியிருப்பில் வசித்து வரும் ரமேஷ் த/பெ பழனி தாழ்த்தப் பட்ட இந்து அருந்ததியர் சாதியை சார்ந்தவர், பரம்பிக் குளம் நீர் பாசன திட்டத்தில் நீர் வளத்துறையில் பாசன உதவியாளராக பணி செய்து வருகிறார்,


    01.08.2023 அன்று செவ்வாய்கிழமை சுமார் 10.30 மணியளவில் ரமேஷ் பணி செய்யும் அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணி செய்யும் திருமதி சாம்ளா என்பவரது கணவர் சதிஸ்குமார்  மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத 2 நபர்கள் ரமேஷ் வீட்டுக் கதவை தட்டி ரமேஷ் வெளியே வந்தவுடன் சாதியை சொல்லி இழிவாக திட்டி ரமேஷின் சகோதரி சுமதியின் நைட்டியை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து ரமேஷ் அவரது சகோதரி சுமதி, அம்மா ஆகியோர்களை கடுமையாக தாக்கி யுள்ளார்கள், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்


    சத்தம் கேட்டு அருகில் குடியிருப்பவர்கள் ஓடி வந்து தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து காப்பாற்றி பல்லடம் அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்கள், சிகிச்சையில் இருந்தபோது பல்லடம் காவல்துறை அதிகாரி ரமேஷிடம் வாக்குமூலம் பெற்று  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 05.08.2023 அன்று வழக்கு பதிவு வழக்கு செய்துள்ளார்கள், பல்லடம் காவல் நிலைய குற்ற எண்: 860/2023, IPC U/C  294(b), 323, 324, 506(2). PHW-4, Sc/St PoA section 3(1)r, 3(1)S,3(2)va ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: 21-08-2023
  • Date of Case Upload: 18-01-2024


Files

1) Fact Finding Report 

A Social Activist Appukutti was brutally attacked and abused by caste name by Caste Hindus

    திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு அருந்ததியர் காலனியை சார்ந்த அப்புகுட்டி, த/பெ காளியண்ணன், பட்டியல் சாதியான தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர், ஜெய்பீம் அசோசியேட்ஸ் நிறுவனத்தில் விற்பனை முகவராகவும், மேலும் சமூக செயல்பாட்டாளராக மக்கள் பணி செய்து வருகிறார், கடந்த 20.03.2023 அன்று பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொடாரம்பாளையம் காலனியில் வசிக்கும் சின்னச்சாமி அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர், அவரது பயன்பாட்டில் இருக்கும் வீட்டை இடிப்பதாக சின்னச்சாமி தகவல் கொடுத்ததால் அப்புகுட்டி சென்றுள்ளார்,  பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சி.டி.சி வேலுச்சாமி மற்றும் சிலர் கனரக வாகனத்துடன் சின்னச்சாமியின் 50 ஆண்டுகால பயன்பாட்டில் இருந்த வீட்டை இடிப்பதற்கு தயாராக இருந்துள்ளார்கள்,  வீட்டை எதற்காக இடிக்கிறீர்கள் வீட்டை இடிப்பதற்கான உத்தரவை யாரிடம் பெற்று இருக்கிறீர்கள், அதற்கான ஆவணங்கள் இருந்தால் காட்டவும் என அப்புகுட்டி கேட்டுள்ளார், பதிலுக்கு வேலுச்சாமி  நான் தாண்ட இங்கே கலெக்டர், நான் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை என்றும், அதை கேட்க நீ யாருடா?   நீ என்ன தொழில் செய்கிறாய், எப்படி சம்பாதிக்கிறாய் எல்லாம் எனக்கு தெரியும் என பொது மக்கள் மத்தியில் அப்புகுட்டியை இழிவுபடுத்தி பேசியுள்ளார், எந்தவித ஆதாரமற்ற குற்றசாட்டுகளை சொல்லி இழிவு படுத்தி பேசியுள்ளார், இருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டு இருக்கும்போது சிறிது நேரத்தில் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து குமார் என்ற காவலர் அங்கே  வந்து அப்புகுட்டியிடம் காவல் ஆய்வாளர் உங்களிடம் பேச வேண்டும் என சொல்கிறார், உடனே அப்புகுட்டியை காவல் நிலையம் சென்றுள்ளார், மாலை 4.00 மணிவரை காத்திருந்தும் காவல் ஆய்வாளர் அங்கே வரவில்லை, மாலை 6.00 மணிக்கு சம்பவ பகுதியில் ஆய்வாளர் இருப்பதாக தகவல் அப்புகுட்டி அங்கே சென்றுள்ளார், ஆய்வாளர் ஹேமலதா அவர்கள் நீதிமன்ற ஆணையை படிப்பதாக சொல்லி ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி தலைவர் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை என படித்து காட்டிய பிறகு  எனவே அரசு பணியை தடுத்தால் வழக்கு பதிவு செய்வேன் என சொல்லிவிட்டு, ஊராட்சி தலைவரிடம் வருவாய் துறையிடம் உத்தரவு பெற்று ஆக்கரமிப்பை அகற்றி கொள்ளுங்கள் இப்போது அகற்ற வேண்டாம் என தெரிவித்ததின் அடிப்படையில் கலைந்து சென்று விட்டார்கள்.


      தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த ஒருவனை எதிர்த்து நம்மால் எதையும் செய்ய முடியவில்லையே என்ற ஆத்திரத்திலும் கோபத்திலும் அப்புகுட்டி மீது அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதாக சி.டி.சி வேலுச்சாமி பொய் புகார் அளித்து வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அடுத்த நாள் 21.07.2023 அன்று அதிகாரிகள் யாரையும் அழைக்காமல், வருவாய்துறையிடம் எந்த உத்தரவும் பெறாமல்  சி.டி.சி வேலுச்சாமி அடியாட்களுடன் சென்று சின்னச்சாமி வீட்டை இடித்துவிட்டு சென்றுள்ளார்கள்,  இது தொடர்பாக  22.07.2023 அன்று சின்னச்சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், காவல்துறையினர் புகாரை ஏற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்யமறுத்து விட்டார்கள். வழக்கு பதிவு செய்ய அப்புகுட்டி வற்புறுத்தி கேட்டபோது, அரசு பணியை செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்கு உங்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளோம் என ஆய்வாளர் ஹேமலதா அவர்கள் தெரிவித்துள்ளார், பெருமாநல்லூர் FIR No:268/2023. IPC: U/S 294(b), 353. கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது, 20.07.2023 அன்று வேலுச்சாமி, பொதுமக்கள் மத்தியில் அப்புகுட்டியை இழிவாக பேசியதற்கான வீடியோ பதிவு ஆதாரத்துடன் 25.07.2023 அன்று நேரிலும் பதிவு தபால் மூலமாக புகார் அளித்துள்ளார், வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டார்கள்.


    அப்புகுட்டி குடியிருக்கும் பகுதியை சார்ந்த ரங்கநாதன் த/பெ பழனி`  என்பவரது  பயன்பாட்டில் இருக்கும் வீட்டை 25.09.2023 அன்று ஊராட்சி துணைத் தலைவர் சி.டி.சி வேலுச்சாமி இடித்துள்ளார்கள், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான உத்தரவை காட்டுங்கள் என கேட்டுள்ளார், அதை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என சொல்லிவிட்டு அப்புகுட்டியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கிராம நிர்வாக அலுவலர் அம்சவேணி கொடுத்த பொய்ப் புகாரின் பேரில் அப்புகுட்டி மீதும் மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளார், (FIR No:388/2023 IPC U/s:143,341,353

  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: Not recorded
  • Date of Case Upload: 18-01-2024


Files

1) FF Report 
2) FIR Copy 

A Dalit Woman was abused by caste name and sexually harassed by Caste Hindus

    எனது சொந்த ஊர் திண்டிவனம் அருகே உள்ள மானூர் நான் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவள் நானும் எனது கணவருமான ராமசந்திரனும் (கவுண்டர்) செஞ்சி ரங்கபூபதி நர்சிங் கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போதே அறிமுகமாக பழகினோம் பிறகு காதலித்தோம் எங்களின் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது கணவர் ராமச்சந்திரன் ஊரான முப்புளியில் எங்கள் வீட்டில் வசித்து வருகிறோம்.


    எனது கணவர் வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார், நான் முப்புளியில் எனது கனவர் வீட்டில் உள்ளேன்.  எங்கள் ஊரில் கழிப்பரை வசதி கிடையாது.  எங்கள் வீட்டிற்கு பின் பக்கம் உள்ள காலி இடங்கலில் நிறைய மரங்களும், செடிகளுமாக மறைவாக இருக்கும் இடத்தில் கிராமத்திலுள்ள பல பெண்கள் திறந்த வெளிக் கழிவறையாக பயன்படுத்துவார்கள். இதனால், நானும் அவ்வப்போது அந்த காலியிடத்தில் சிறுநீர் கழிப்பேன்.


    இந்நிலையில்தான் கடந்த 20.12.2023 அன்று காலை நான் வீட்டிற்கு பின்பக்கம் சென்று சிறுநீர் கழித்துவிட்டு, வீட்டிற்குள் இருந்தேன் அப்போது கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரும், அவரது மனைவி சுகன்யா என்பவரும் என்வீட்டிற்கு வெளியில் நின்றபடி "ஏய். வெளிய வாடி வீட்டுக்குள்ள பூந்துகிட்டு என்னாடி செய்ற என்றார் என கூறி சத்தம் போடனர். நான் வீட்டிலிருந்து வெளியில் வந்து,"என்னாச்சு. ஏன் இப்படி பேசுறீங்க” என்றேன். அப்போது, மேற்படி சுகன்யா, "ஏண்டி பரத்தேவிடியா


    நாயே என்னோட வீட்டுக்கு பின்னாடி இருக்குற இடத்துல நீ ஏண்டி பாத்ரூம் போற நாயே" என்று கேட்டார்.  அதற்க்கு எல்லோரும் போறாங்க நானும் போறேன். அதுக்கு ஏங்க இப்பிடி பேசரிங்க' ன்னு சொன்னேன்.  உடனே சுகன்யா ஒரு தடவ சொன்னா உனக்குப் புரியாதா நாங்க ஊர்ப்பொம்பளங்க போற இடத்துல, பறச்சி உனக்கு என்ன வேல, கவுண்டன் சாதியில கட்டிக்கிட்டதால நீ ஊர்க்காரி ஆயிடுவியா" என்று திட்டிக்கொண்டே வந்து என் முடியைப் பிடித்து இழுத்தார்.  அப்போது அவரது கணவர் சந்தோஷ்குமார் என்னருகில் வந்து எனது நைட்டியைப் பிடித்து இழுத்து என்னைக் கீழே தள்ளினர்.  கீழே விழுந்த என்னை கணவன் மனைவி இருவரும் காலால் மிதித்தும் உதைத்தும் சித்திரவதை செய்து மேலும் சாதி சொல்லி இழிவு செய்து பேசினர், இந்தக் கொடுமையும் அவமானமும் தாங்காமல் பயத்தில் நான் வீட்டுக்குள்ளேயே இருந்தேன் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. அதன்பிறகு 2912.2023 அன்று மாலை சுமார் 4:30 மணியளவில் நான் வீட்டில் இருந்தபோது மேற்படி சந்தோஷ்குமார் மேலும் சில ஆண்களுடன் எனது வீட்டிற்கு வந்தார். ஏண்டி பறத் தேவிடியா சொன்னா கேட்க மாட்டியா அங்க எதுகுடி நீ பாத்ரூம் போற" என்று மிரட்டினார். ஊரில் வேறு மறைவான இடமோ பொதுக் கழிப்பறையோ இல்லாத காரணத்தால் பெண்கள் பலர் இதனை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். என்னைத் தாக்கிய சந்தோஷ்குமாரிடம் அது கூடுவாஞ்சிகாரருடைய இடம்தானே என்னை ஏன் போகக்கூடாது என்கிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர், "சொன்னா கேக்காம எதுத்தா பேசற பற நாயே என்று திட்டி அடிக்க வந்தார்.  


     மேலும், எங்கள்  வீட்டில்  வாடகைக்கு  இருப்பவர்களிடம்  இங்கிருந்து  காலி  செய்துக்  கொண்டு  போய்விடுங்கள்,  இவள  அடிச்சி தெரத்த போரோம், இங்கிருந்து  இவ  போகலன்ன  பெட்ரோல்  குண்டு  போட்டு காலி பண்ணிடுவோம்.  நீங்க  தேவையில்லாம  மாட்டிக்கிட்டு சாகாதீங்க என்று மிரட்டினார்கள்.  


     இது குறித்து வழக்கிறிஞர் முனியாண்டி அவர்களின் உதவியுடன் சம்பவதன்று மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.  ஆய்வாளர்   லட்சுமி  அவர்கள்  நீ தான்  ஊர்காரப்  பையனை  கல்யாணம் பண்ணிகிட்டு வந்துட்டியே அப்புறம் எப்படி SC-ல வருவ, SC/ST Act  எல்லாம் வழக்கு போட முடியாது உனக்கு இது பொருந்தாது என கூறி மறுத்து விட்டார்.  அதன்பிறகு  எஸ்.பி. டீ.எஸ்.பி ஆகியோருக்கு புகார் அனுப்பி SC/ST Act - ன் கீழ்  வழக்கு  பதிவு  செய்தனர்.  ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. 

  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: Not recorded
  • Date of Case Upload: 17-01-2024

Total Visitors : 6644258
© All rights Reserved - Atrocity Tracking and Monitoring System (ATM)
Website is Managed & Supported by Swadhikar