Total records:1329

previous123456789...265266next

67 people died after drinking poisonous liquor in Kallakuruchi

    வசந்த மலர் வ/40 க/பெ சுப்ரமணியன் ராஜ வீ தி சேஷசமத்திரம் கிராமம் சங்கராபுரம் வட்டட் ம் கள்ளக்குறிச்சி மாவட்டம், நான் மேற்கண்ட முகவரியில் வசித்துத் வருகிறேன்.


    எனக்கு எங்க ஊரை சேர்ந்த சுப்ரமணியன் வயது-42 த/பெ முருவன் என்பவருடன் திருமணம் ஆகி ஒரு ஆண்மற்று ம் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  நான் கூ லி வேலை செய்து வருகிறேன். எனது கணவர்சுப்ரமணியனுக்கு சாராயம் குடிக்கும் பழக்கம் இருப்பதால் அவருக்கு சாராயம் விற்பனை செய்யும் நபர்களைபற்றி தெரியும். எனது கணவர் அடிக்கடி குடி த்துத் வி ட்டு வீட்டுக்கு வருவார்.  அது போன்றே19.06.2024-ம் தேதி மாலைசுமார்06.00 மணிக்கு சாராயம் கு டித்துத் வி ட்டு வீட்டிட்ற்கு வந்தார்.  20.06.2024ம் தேதி காலை சுமார்11.00 மணியளவில் தனக்கு கண்ணை மறைப்பதாகவும் வாந்தி வருவதாகவும் வயிறு வலிப்பதாகவும் எங்களிடம்  கூறினார். உடனே நாங்கள்108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சிச் அரசு மருத்துத்வகல்லூரி மருத்துத்வமனையில்சிகிச்சைக்கு சேர்த்தோம். அங்கு எனது கணவரிடமும் கணவருடன் சிகிச்சைக்கு சேர்ந்து இருந்தவர்களைவிசாரிக்க19.06.2024 தேதி காலை சுமார்06.00 மணியளவில்எங்க ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜாஎன்பவரது மரவள்ளி குச்சிச் காட்டில் பெரியசாமி மகன் சின்னதுரை விரியூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியநாயகம்மகன் நடு பையன் என்கிற ஜோசப் ராஜா இருவரும் ஒரு பெரிய மண்பானையில் சராரயத்தை கலக்கி பாக்கெட் பாக்கெட்டாக கட்டி ஒரு பாக்கெட் ரூ.50க்கு வி ற்பனை செய்ததாகவு ம் அங்கு சுமார்20 பாக்கெட்டை  தேவபாண்டலம் ரவி விற்றதாகவும் மீதமுள்ள சாராய பாக்கெட்டை ரவி த/பெ மாரி எடுத்துத்கொண்டுசென்று விட்டதகவும் கூ றினார் மேலும் என் கணவருடன் எங்க ஊரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் முத்துத், பிச்சைச்சைகாரன் மகன் அய்யப்பன், பாலத்தான் மகன் ராஜேந்திரன், வெங்கடாச்சலம் மகன் ஆறுமு கம், பொன்னுசாமி மகன் முருகேசன், நாவான் மகன் செல்லமுத்துத், நல்லமுத்துத் மகன் சாமுண்டி, கோவிந்தன் மகன்அண்ணாமலை, சிதம்பரம் மகன் சிவக்குமார், கோவிந்தன் மகன் தெய்வ சிகாமணி, கண்ணு மகன்அய்யாகண்ணு, பூச்செண்டு மகன் கோவிந்தன், சின்னகண்ணு மகன் ராஜலிங்கம், சந்தி ரசேகர் மகன்வேல்முருகன், ராமசாமி மகன் சாமி கண்ணு, தொப்பளான் மகன் கதிர்வேல், சிங்காரம் மகன் சின்னது ரை, பொன்னுசாமி மகன் முருகன், நாதன் மகன் செல்லமுத்துத், கோவி ந்தன் மகன் ராஜா, துரைசாமி மகன்சகாதேவன், அய்யா கண்ணு மகன் மணிகண்டன், மணி மகன் வி ஜய், குப்பக்கவு ண்டர் மகன் அய்யம்பெருமாள், கோவிந்தன் மனைவி வசந்தா மேலும் தேவபாண்டலத்தை சேர்ந்த கண்ணன் மகன் சிலம்பரசன், ராமசாமி மகன்ஆறுமுகம், திருமலை மகன் சிவா, செல்லம்பட்டை சேர்ந்த நவாம் மகன் செல்வராஜ், நெடுமானூரை சேர்ந்தமுனியகவு ண்டர் மகன் நாகராஜ் கொசப்பாடியை சேர்ந்த ராமசாமி மகன் வெற்றி வேல் மற்றும் பலர் அங்குசிகிச்சைச்சை பெற்று வந்தார்கள். மேலு ம் அங்கு சிகிச்சைச்சையில் இருந்தவர்கர்ளிடம் நீங்க எங்க சாராயம் வாங்கிகுடிச்சிங்கனு கேட்ட போது அவர்களும் மேற்படி எதிரிகள் விற்பனை செய்த இடத்திலேயே சாராயத்தை வாங்கிகுடித்ததாக கூறினார்கள். சிகிச்சைச் சையில் இருந்த எனது கணவர் கள்ளக்குறிச்சிச் அரசு மருத்துவ கல்லூ ரி மற்றும்மரு த்துத் வமனையி ல் இன்று22.06.2024ம் தேதி காலை சு மார்07.00 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகமருத்துவர்கள் கூறினார்கள். எனவே மேற்படி எதிரிகளான தேவபாண்டலத்தைச் சேர்ந்த மாரி மகன் ரவி மற்றும் எங்க ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் சின்னதுரை வரியூரை சேர்ந்த நடுப்பையன் என்கிற ஜோசப்ராஜாஆகியோர்கள் சாராயத்தில் அதிக போதை தருவதற்காக சாராயத்தில் அதிகப்பட யாக மெத்தனால் கலந்துவிற்பனை செய்துள்ளனர் என்பது மருத்துத்வர்கள் மூலம் எனக்கு தெரியவந்தது. அதிகப்படியாக மெத்தனால்கலந்து சாராயம் விற்றால் உயிரிழப்பு ஏற்படும் என்று நன்கு தெரிந்தே சாராயத்தில் அதிகப்படியான மெத்தனால்கலந்து விற்று மனித உய ரிழப்பை ஏற்படுத்தியு ள்ளனர். எனது கணவரின் இறப்பிற்கு காரணமான எதிரிகள் ரவி,சி ன்னது ரை, ஜோசப்ராஜா மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுட்க்கொள்கிறேன்.


    சங்கராபுரம் காவல் நிலைய குற்ற எண்.334/2024 us 328,302 IPC r/w 4(1)(a), 4(1-A) TNP Act ன்படி வழக்கு பதிவுசெய்யப்பட்டட் து. 

  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: Not recorded
  • Date of Case Upload: 14-10-2024

Dalit Peoples were Denied temple entry at Theevattipatti of Salem District

    தமிழகத்தின் வட மேற்கு எல்லையில் சேலம் தருமபுரி சாலை ஓரத்தில் உள்ளது தீவட்டிபட்டி, பொதுவாக சேலம் மாவட்டம் வறட்சி மாவட்டங்களில் ஒன்று. சாதிய இறுக்கம் கொண்ட மாவட்டம். தீவட்டிப்பட்டி, நாச்சினாம்பட்டியில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் சுமார் 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  


    தீவட்டிப்பட்டியில் வன்னியர், சோழிய வேளாளர், போயர், உடையார், கவுண்டர், நாடார், அருந்ததியர், இஸ்லாமியர் சமூகத்தினர் சுமார் 3000 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்குதான் இந்து அறநிலைத்துறை கட்டுப்பட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது.


    இந்த மாரியம்மனுக்கு மேற்கூறிய சமூகத்தினர் மட்டுமே வரி வசூல் செய்து ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இவ்விழா மூன்று வாரமாக நடைபெறும் விழாவில் முதலில் ஆதிதிராவிடர் குடியிருப்பு அருகே அமைந்துள்ள அம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து பிறகு காப்புக்கட்டி, கம்பம் நட்டு நோம்பு சாத்துவது வழக்கம் இறுதியில் தேரோட்டம் நடைபெறும்.


    கடந்த 2023 ல் நடைபெற்ற திருவிழாவில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மூன்று முறை மறுமலர்ச்சி  திரைப்படத்தில் வரும் ராசு படையாட்சி எனும் பாடல் போடபட்டுள்ளது. நிகழ்ச்சியை கண்டுகளித்துக் கொண்டிருந்த ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த விஜயின் தம்பி முறையான மணிகண்டன் என்பவர் விஜயகாந்து பாடலான பொட்டு வச்ச தங்ககுடம் பாடலை கேட்டதால் வன்னியர் இளைஞர்களுக்கும் மணிகண்டனுக்கும் கைகலப்பு ஏற்பட்டு பிறகு காவல் நிலையம் வரை சென்று சமரசம் செய்யப்பட்டது.


     தற்போதைய சம்பவம்


    மே 1 ந் தேதி ஆதிதிராவிடர் மக்கள் சுமார் 4 பேர் காப்பு கட்டுவதற்காக பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது பூசாரி உங்களுக்கு காப்பு கட்ட கூடாது என ஊர்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  மேலும் உங்களை கோவிலுக்கும் வரக்கூடாது என நிர்வாகிகள் சொல்லியிருப்பதாக கூறியிருக்கிறார்.


    ஆதிதிராவிடர் மக்கள் காப்பையாவது கட்டிவிடுங்க என மீண்டும் கேட்டபோது பூசாரி காப்பை கீழே தூக்கி போட்டுவிட்டு நீங்களே எடுத்து கட்டிக்கொள்ளுங்கள் என சொல்லியிருக்கிறார்.


    அன்றைய தினமே மாலையில் அம்மனுக்கு அலகு குத்துவது வழக்கம் எப்போதும் போல் மாலை 6.00 மணிக்கு ஆரம்பித்து 9.00 மணிக்கெல்லம் வன்னியர்களும் பிற சமுகத்தினரும் அலகு குத்தி முடித்துவிடுவார்கள், ஆனால் அன்று இரவு சுமார் 11.30 வரை முடிக்கவைல்லை. மேள இசையோடு ஆடிக்கொண்டு பா.ம.க கட்சி தலைவர் அன்புமணி உருவபடத்திற்கு பாலபிஷேகம் செய்து கொண்டும் வேண்டுமென்றே தாமதமாக கோவிலுக்குச் சென்றுள்ளனர்.


     அதன் பின் ஆதிதிராவிடர் சமூகத்தினர் சுமார் நான்கு பேர் அலகு குத்திக்கொண்டு கோவிலுக்கு சென்றுள்ளனர். பிறகு அலகை எடுத்துவிட பூசாரியிடம் கேட்டபோது எடுத்துவிட மறுத்துள்ளார். அதன் பின் இரவு சுமார் 1.00 மணி அளவில் மேளகாரர்கள் உதவியோடு அவர்களே அலகை எடுத்து கொண்டுள்ளனர்.   


    இதை தொடர்ந்து ஆதிதிராவிடர் மக்கள் தேங்காய் உடைக்க கேட்டுள்ளனர் அப்போது பூசாரி தேங்காயும் உடைக்க முடியாது, திருநீரும் கொடுக்கமுடியாது என கூறியிருக்கிறார். அங்கிருந்த ஆதிதிராவிடர் சமூகமான விஜய் என்பவரின் தம்பி மணிகண்டன் என்பவர் வாக்குவாதம் செய்து கோவிலுக்குள் நுழைய முற்பட்டுள்ளார். இதை கண்ட பூசாரி கோவில் கருவரை திரையை மூடிவிட்டு. பூசாரியும், ஊர்காரர்கள் சிலரும் உடனே காவல் துறைக்கும் வருவாய் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு வட்டாட்சியர் ஹசினாபேகம் மற்றும் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் கோவிலுக்கு வந்துள்ளனர்.


    காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவரும் அ.தி.மு.க கட்சியின் ஒன்றிய மாணவர் அணி செயலாளருமான விஜயன் என்பவரை உடனே கோவிலுக்கு வரும்படி செல்போனில் பேசி அழைத்துள்ளார். அவர் கோவிலுக்கு வந்து ஆதிதிராவிடர் இளைஞர்களை சமாதனப்படுத்தி நாம் இதுவரை ஒற்றுமையாக இருந்து வருகிறோம் ஏன் இப்போது பிரச்சனை என பேசி தலித் இளைஞர்களை சமாதனபடுத்தி அழைத்து சென்றிருக்கிறார்.


    மறுநாள் 2 ந் தேதி காடையாம்பட்டி வட்டாட்சியர் ஹசினாபேகம் தலைமையில் சமாதனம் கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் ஓமலூர் டி.எஸ்.பி சஞ்சீவிகுமார், தீவட்டிபட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன், இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் கதிர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இருதரப்பிலும் தலா 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் ஞானசேகரன் இந்த கோவில் 1973 ல் இருந்து இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோவிலுக்குள் வர அனைவருக்கும் உரிமை உண்டு என கூறியிருக்கிறார்.


    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் போயர் மட்டும் கோவிலுக்குள் விடுவோம், இவர்களை விடமாட்டோம் மீறி இவர்கள் கோவிலுக்குள் வந்தால் வெளியே நின்று கும்பிடட்டும். அதற்கும் ஒரு நேரம் ஒதுக்கி சொல்கிறோம்.  நாங்கள் தற்போது 10 பேர்தான் கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறோம். மற்றவர்கள் எல்லாம் கோவிலில் இருக்கிறார்கள். அவர்களோடும் கலந்து பேசுகிறோம் எங்களுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் என கூறியிருக்கிறார்கள். பிறகு சுமார் 1.00 மணியளவில் கூட்டம் முடிக்கப்பட்டு அவர், அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.


    பெரிய மாரியம்மன் கோவிலில் அடுத்தநாள் 3 ந் தேதி தேரோட்டம் என்பதால் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பற்றி பேசுவதற்கு ஆண்களும், பெண்களும் கூட்டமாக கூடி கோவிலில் இருந்துள்ளனர். அப்போது விஜய்யின் தம்பி மணிகண்டன், அருண்,இவர்களுடன் ஒருவர் சேர்ந்துக்கொண்டு மூவரும் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு உருட்டுக்கட்டையுடன் சென்றுள்ளனர். இதை கண்ட மாற்று சாதி இளைஞர்கள் மூவரையும் துரத்திக்கொண்டு ஓடும் போது அவர்கள் கையில் பிடிபடவில்லை என்பதால் கருங்கல்லை எடுத்து அடித்துளள்னர். இதில் அருண் என்ற தலித் இளைஞருக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது. பலத்த காயம் அடைந்த அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


    தகவல் அறிந்த அருணின் தாயார் பெருமாயி (44), பதறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடும் போது தலித் மக்களுக்கும் தகவல் பரவவே சுமார் 250 க்கும் மேற்பட்ட மக்கள் சேலம் டூ தருமபுரி நெடுஞ்சாலையில் கூடியுள்ளனர். பின்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அருணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.  தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலித் மக்களிடம் ஒன்பது பேரை அடையாளம் கண்டிருப்பதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் தலித் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.


    அதே தருணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கோவிலுக்குள் நுழைய முற்பட்ட போது தகவல் பரவவே தீவட்டிப்பட்டியை சேர்ந்த பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதியினர் ஒன்று கூடி அவர்களும் நெடுஞ்சாலைக்கு வந்து கற்கலால் தலித் மக்கள் மீது வீசியுள்ளனர். இதனால் தலித் மக்களும் அவர்கள் மீது கற்களை வீசிக்கொண்டே பீதியில் அவர்கள் பகுதிக்கு ஓடும்போது ஒரு சில தலித் இளைஞர்களால் தீவட்டிப்பட்டியில் உள்ள வன்னியர் சமூகத்தினரின் நான்கு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளனர்.


    இந்த இருதரப்பும் கற்களை வீசியதில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் தாக்கப்பட்டுள்ளனதாக் தெரிகிறது. மேலும் காவல் வாகனமும், ஒரு ஆட்டோவும் சேதபடுத்தப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் தலித் இளைஞர்களே செய்ததாக காவல் துறையினரும், தலித் அல்லாதவர்களும் கூறுகின்றனர்.


    இதன் பிறகே சுமார் 200 க்கும் மேற்பட்ட போலிசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து சம்பவத்தில் ஈடுபட்ட இரு தரப்பிலும் சிலரை உடனே கைது செய்துள்ளனர். ஆனால் தொடர்ந்து நாச்சினாம்பட்டி, தீவட்டிப்பட்டி தலித் கிராமத்தில் போலிசார் அத்துமீறி நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்து பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்து பிறகு சிறையில் அடைத்துள்ளனர்.


    காவல் துறையின் தொடர் தாக்குதலில் தலித் சமூகத்தினரின் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என சுமார் 60 க்கும் மேற்பட்டோர் கொடுரமாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர். 

  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: 10-05-2024
  • Date of Case Upload: 14-10-2024


Files

1) Fact Finding Report 
2) FIR copy 

A Dalit Man Manimaran brtally attack by caste hindu

    எனது பெயர் மணிமாறன், நான் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தவன் ஆட்டோட்வை வாடனக்கு ஓட்டிட் பிழைப்பு நடத்திவருகிறேன் மேற்படி 06.05.2024 இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் செவலை ரோட்டிட்ல் உள்ள RK மருத்துத்வமனையில் இருந்து சவாரி ஏற்றிக் கொண்டு பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தேன் அப்போதுஇந்தியன் வங்கி அருகே நடுரோட்டிட்ல் வெள்ளை நிற கார் நின்றது உடனே நான் ஆட்டோட்வில் இருந்து HORN அடித்தேன் கார் எடுக்கவில்லை உடனே காரில் இருந்து TKT முரளி மற்றும் அவருடன் 5 பேர் இறங்கி வந்து டேதேவிடியா பையா என்னடா HORN அடிக்கிற என தகாத வார்த்தையில் என்னை சாதியைச் திட்டி TKT முரளி என்பவர்எனது இடது கன்னத்தில் அடித்தார் உடனே நான் அண்ணா காரில் இருப்பது நீங்கதான்னு தெரியாது என்னைமன்னிச்சுச்டுங்க என்று சொல்லி கை எடுத்துத் கும்பிட்டேட்ன். நானும் இதே ஊர்தார் அண்ணா தாசர்புரம் தான்தலைவரே என்று சொன்னேன் அப்படியா என்று சொல்லி அவர் அருகே இருந்த மற்றும் அவருடன் வந்த 10-க்கு ம்மேற்பட்டட் நபர்கர்ளை பார்த்து  இந்த பற தேவிடியா பையனை பங்க்-கு இழுத்துத் வாங்கடா என்று சொல்லி காரில்சென்று விட்டாட்ர் உடனே அவருடன் வந்த அடியாட்கள் 10 பேரும் என்னை அடித்தும், உதைத்துத், கொலை வெறிதாக்குதல் நடத்தியும் தற தற வென இழுத்துத் சென்று பங்க்-ல் உள்ள ரூமி ல் போட்டுட் சிறை வைத்தார்கள் அங்கே TKT-முரளி அவர்கர் ளின் காலில் விழசொல்லி அவரது அடியாட்கள் கட்டாட்யப்படுத்தினார்கள் மீண்டும் TKT முரளி என்பவர்பார்த்தாயா இந்த பற தேவிடியா பையன் காலில் விழாமல் திமிரா நிக்குறான் இவனை இங்கேயே அடித்துத்கொல்லுங்கடா என்று கொலை மிரட்டல் விடுத்தார்கள் உடனே நான் அங்கிருந்து உயிர க்கு பயந்து கொண்டுதப்பித்துத் வந்து திருக்கோவிலூர் அரசு மருத்துத்வமனையில் சிகிச்சைச்சை பெற்றுக் கொண்டு காவல் நிலையம் ஆஜராகிபுகார் செய்கிறேன் என்னை கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய TKT முரளிஉள்ளிட்ட முகம் தெரிந்த பெயர்தெரியாத 10க்கு மேற்பட்டட் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் எனக்கும் என் உயிர்க்கும் பாதுகாப்பு வழங்குமாறுமிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்.


    நிலைய குற்ற எண்.206/2024 பிரிவு 147, 294(b), 323, 341, 342, 506(ii) IPC & Sec 3(1)(r), 3(1)(s), 3(2)(va) SC/ST (POA) Act

  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: Not recorded
  • Date of Case Upload: 13-10-2024


Files

1) FIR Copy 

Legal intervention to get pension for family of deceased sanitation worker Ranganathan

    Case details is not available
  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: Not recorded
  • Date of Case Upload: 13-10-2024

Assault with tribal youth

    सोशल मीडिया पर एक वीडियो वायरल हुआ जिसमें एक युवक को नंगा कर के उल्टा लटका के छह युवकों द्वारा बेल्ट और डंडे से मारपीट करते हुए दिखाई दे रहा था। वीडियो बैतूल जिले का था, जिसमें पीड़ित आदिवासी और आरोपी साफ नजर आ रहे थे। विडियो वायरल होने के बाद पीड़ित फरियादी आदिवासी युवक और उसके भाई द्वारा 13 फरवरी 2024 को कोतवाली थाना बैतूल में शिकायत किये जाने के बाद आरोपियों की धरपकड़ और उनके निवास के अवैध अतिक्रमण को जेसीबी चला कर गिराया गया।


    मामला रंगदारी वसूलने और दहशत बनाने के लिये मारपीट किये जाने का था। पीड़ित आदिवासी युवक ने बदनामी और डर के मारे घर में किसी को घटना की जानकारी नहीं दी, परंतु आरोपियों द्वारा वीडियो वायरल किये जाने के बाद से पीड़ित आदिवासी युवक ने घटना की जानकारी अपने भाई को दी। मामला सुर्खियों में आने के बाद से आदिवासी समाज संगठन और अन्य सामाजिक संगठनों ने मिल कर 16 फरवरी को बैतूल बंद का आव्हान किया। घटना पूरे प्रदेश में सुर्खियों में आने के बाद बैतूल जिले के 18 पुलिस अधिकारी कर्मचारियों के तबादले किये गये। पुलिस ने सारे आरोपियों को गिरफ्तार कर जेल भेज दिया है।

  • Posted by: NDMJ
  • Fact finding date: 21-02-2024
  • Date of Case Upload: 31-08-2024

previous123456789...265266next
Total Visitors : 8133853
© All rights Reserved - Atrocity Tracking and Monitoring System (ATM)
Website is Managed & Supported by Swadhikar